திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வள்ளி கனகராஜ் மற்றும் உதயபானு தம்பதியினர். சமூக ஆர்வலரான இவர் தனது திருமண நாளை முன்னிட்டு பல்லடம் நான்கு வழி சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து வருபவர்களுக்கும் இருசக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வருபவர்களுக்கும் இனிப்பு வழங்கி தனது திருமண நாளை கொண்டாடினார். மேலும் இந்நிகழ்ச்சி பல்லடம் போக்குவரத்து காவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.