கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் குட்கா பான் மசாலா கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலிசாருக்கு பொள்ளாச்சி வழியே கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மரப்பேட்டை அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது கேரள பதிவில் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டதில் இரண்டு பிளாஸ்டிக் மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து காரை ஓட்டி வந்தவர்களிடம் விசாரனை மேற்கொண்ட போது கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரஷீத், கலில் ரகுமான் என்பதும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி கேரளாவிற்கு கொண்டு செல்வது தெரிய வந்தது அவர்களிடமிருந்து 9 லட்சம் மதிப்புள்ள 60 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்

கஞ்சா கடத்திய நபர்களை திறமையுடன் செயல்பட்டு பிடித்த தனிப்படையினரை பாராட்டிய கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பத்திரிக்கையாளரிடம் கூறும்போது கடந்த 44 நாட்களில் மட்டும் 175 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது

கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ரஷீத், மற்றும் கலீல் ரகுமான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை தடுக்கும் விதமாக வியாபாரிகள் சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் மீண்டும் கடத்தல் தொழில்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக கடுமையான தண்டனை பெறும் வகையில் முழு முயற்சியுடன் காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்

மேலும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார் பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார் உடன் இருந்தனர்

சிறப்பாக பணியாற்றிய தனிப்பட்டையினரை மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டினார்,பொள்ளாச்சி பகுதியில் 60 கிலோ கஞ்சா பிடிபட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *