தூத்துக்குடியில் அதிமுக சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு வழங்கினார்.
தூத்துக்குடி
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் ஏற்பாட்டில் 200 ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் புத்தகப்பை, நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்டம் வழங்கும் விழா தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, மேம்பாலம் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் 200 ஆட்டோக்களில் வந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் தா.மி.பிரபு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், கே.ஜெ.பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், பொறுப்பாளர் சென்பகசெல்வன், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், மாவட்ட மாணவரணி செயலாளர்