தென்காசி,தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் காவல் துறையை கண்டித்தும், கனிமவள கொள்ளை அதனால் ஏற்படும் உயிர் பலிகள் ஆகியவற்றை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர்கள் எஸ்.சிவகுமார், ஆர்.மாடக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர்
வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் அருண், துணை தலைவர் ரெங்கராஜன், சண்முகராஜன் பி வி ஆர் கண்ணன் பொருளாளர் ஜெபா இணை செயலாளர் செல்வகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் ,முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள், மற்றும் ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
அதன் பின்னர் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமாரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தென்காசி திருநெல்வேலி மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது இங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சாலையை கடக்க பெண்கள், குழந்தைகள், நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர்கள் அனைவரும் மிகவும் சிரமமாக உள்ளது எனவே இந்த பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும், தமிழ்நாட்டின் கனிம வளங்களை கேரளாவிற்கு எடுத்து செல்லும் கனரக வாகனங்கள் அதிக பாரத்துடனும் அதி வேகத்தில் செல்கிறது.
இதனால் தென்காசி மாவட்டம் விரைவில் பாலைவனம் ஆகி விடும் எனவே கனிம வளங்களை எடுத்து செல்ல தடை விதித்து இனி வரும் சந்ததியினரை பாதுகாத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சின்னத்துரை பாண்டியன், சுப்பிரமணியன், வேல் பாண்டியன், திருமலைக்குமார், சுந்தர்ராஜ், சசிகுமார், தூதர்சிங், ராஜா மறவன், மாரியப்பன், முத்துகுமார், மரகதம் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.