தென்காசி மாவட்டம்,கீழப்பாவூர் பேரூராட்சி மேலபட்டமுடையார்புரத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் வழங்கினார்
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட மேலபட்டமுடையார்புரத்தில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 101 விவசாயிகளுக்கு மண்வெட்டி, தென்னங்கன்று மற்றும் மருந்து தெளிக்கும் பம்பு ஆகியனவற்றை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் ஆலங்குளம் எம்பிஎம்.அன்பழகன், கடையும் மகேஷ்மாயவன், கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்.அறிவழகன், முன்னாள் துணைத்தலைவர் தங்கச்சாமி, மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேவஅன்பு, ஜேஸ்மின்யோவான், சாமுவேல்துரைராஜ், விஜிராஜன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், இசக்கிமுத்து, பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், மேலப்பட்டமுடை யார்புரம் பகுதி திமுக நிர்வாகிகள் தங்கப்பாண்டி, ராமசாமி, அழகேசன், யேசுதாஸ் செல்லத்துரை, பால்பாண்டி, பாண்டியன், மாடசாமி, ராம்ராஜ்,சத்தியராம், வார்டு செயலாளர்கள் சுடர்ராஜ், மாரியப்பன், மலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.