கம்பத்தில் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஏகலூத்து ரோடு புதிய மின்வாரிய அலுவலகம் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே பாரும் செயல்பட்டு வருகிறது
இந்த மது கடைக்கு வரும் மது பிரியர்கள் மது அருந்தும் பாருக்குள் மது குடித்துவிட்டு சாலையில் நடந்து சென்று அவர்களுக்குள் தகராறு ஈடுபட்டு வருகிறார்கள்
இதுபோன்ற தகராறால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் எனவே அரசு மதுபான கடை மற்றும் பார் இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி அந்தப் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு டாஸ்மாக் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இதுகுறித்து தகவலின் பெயரில் கம்பம் தெற்கு போலீஸ் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.