அவிநாசி யுகம் பொதுநல அறக்கட்டளையின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி கட்டணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் செம்பியநல்லூர் கிராமம், வெள்ளியம்பாளையம், மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள யுகம் பொதுநல அறக்கட்டளையின் சார்பில் ,8 ,10 , 12 ஆம் வகுப்பு பயின்று வரும் அப்பா அம்மா இல்லாத குழந்தைகளுக்கு பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி சீருடை, நோட்டு புத்தகம், பள்ளி பை மற்றும் பள்ளி கட்டணம் என ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவினை மாணவ மாணவிகளின் பெற்றோரிடம் வழங்கும் நிகழ்வு யுகம் பொதுநல அறக்கட்டளையின் அலுவலகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வின் போது அறக்கட்டளை நிறுவனர் ரோஸி சதீஸ்குமார் மற்றும் சரோஜா, வரதராஜ் , இதர நிர்வாகிகள், சதீஸ்குமார் (சமூக ஆர்வலர்) மற்றும் ஊர் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.