கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து மரணம் ஏற்பட்ட சம்பவத்திற்கு காரணமானகள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் விற்றவர்கள் மீது நடவடிக்கை என்பதுடன் அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் காவல்துறை மதுவிலக்கு பிரிவினர் மற்றும் வருவாய்த் துறையினர் மீதும் தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தக்கோரி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் பி.கே.விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.ரவி துவக்கி வைத்தார். சத்திரப்பட்டி ஆர்.பி.முத்துமாரி முடித்து வைத்துப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கணேசமூர்த்தி ,கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆ.முருகன்,ஜி.தர்மசாஸ்தா,ஏ.வரதராஜன், எல்.பகத்சிங் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.