பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் தொலைத்த தங்க நகை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த வனத்துறையினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க குவிந்தனர் இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் செயின் தவறிவிட்டது இது குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரிடம் சம்பவம் பற்றி கூறினார்
உடனடியாக நடவடிக்கை எடுத்த வனத்துறையினர் அருவியில் இறங்கி தீவிர தேடுதல் பணியை ஆரம்பித்தனர் இதில் மதுரையை சேர்ந்த செந்தில்குமார் உடைய இரண்டு பவுன் தங்கச் செயின் அருவியில் கண்டுபிடிக்கப்பட்டு அருவியில் குளிக்கும் போது தவறவிட்ட நபரிடம் இரண்டு பவுன் தங்கச் செயினை வனத்துறையினர் ஒப்படைத்தனர்.
இந்த நடவடிக்கையை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினரின் சேவையை மனதார பாராட்டினார்கள்