விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடமேற்கு பகுதியில் உள்ள தென்றல் நகர் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத அருள்மிகு கிருஷ்ணர் கோவிலில் வருடாபிஷேக விழா சிறப்பாக நடத்தப்பட்டது
யாதவர் சமூகம் மற்றும் ஆடு வளர்ப்பு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் யாகம் வளர்க்கப்பட்டு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க வருடா அபிஷேகம் நடத்தப்பட்டது. அருள்மிகு ருக்மணி- சத்யபாமா ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்வித்து தீபாராதனை நடத்தி பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாக குழு தலைவர் அ.முனியசாமி, செயலாளர் கொ. வீரமணி பொருளாளர் எஸ். முருகானந்தம் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், நிர்வாக கமிட்டியினர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.