ரா.கல்யாணமுருகன்.செய்தியாளர்.
விருத்தாசலம் : ஜூன், 26
போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விருத்தாசலத்தில் பள்ளி | மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்பராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதை பழக்கம் நல்ல குடும்பத்தை கெடுக்கும், போதை பழக்கத்தை ஒழிப்போம் பூஉலகில் வாழ்ந்து காட்டுவோம், கள்ளச்சாராயத்தை ஒழிப்போம் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாலக்கரை, ஜங்ஷன் ரோடு வழியாக பஸ் நிலையம் வரை சென்று . பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலால் உதவி ஆணையர் சந்திரகுமார், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் சையத்மெஹ்மூத், காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், வட்டாட்சியர் உதயகுமார், காவல் ஆய்வாளர் முருகேசன், கலால் ஆய்வாளர் தெய்வசிகாமணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.