திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து நீதிமன்ற வாயில் முன்பாக நடைபெற்றுது
தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பும் செய்து இந்திய தண்டனை சட்டம்- IPC, குற்றவியல் நடைமுறை சட்டம்- CrPc, இந்திய சாட்சிய சட்டம்- IEA ஆகிய சட்டங்களை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாஹரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்க்ஷிய அதிநியாயம் என்று சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து, திருத்தம் செய்துள்ளனர்.
மேற்படி திருத்தம் செய்யப்பட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்த வேண்டும். அனைவருக்கும் சட்டம் என்பது சமமாக பாவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வழக்கறிஞர்களின் போராட்ட கூட்டுக்குழு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் போராட்டக் குழுவின் நிர்வாகிகள் கந்தசாமி பிரதாபன் திருமலை குமார் ரமேஷ் காஜா முகைதீன் சாகுல் ஹமீது முகமது காசிம் முஹம்மது ஷபி சாமிநாதன் நவமணி கணேச பெருமாள் செந்தில்குமார் சுரேஷ் ராஜேந்திரன் செல்வ ஆண்டனி ஜெகன் ஜோயல் ஹென்றி கார்த்திக் காந்திமதி நாதன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்