இளநிலை பட்டபடிப்பு முடித்து தனியார் வங்கிகளில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு ஏதுவாக பயிற்சிகளை இன்ஸ்டியூட் ஆப் புரொபசனல் பேங்கிங் எனும் பயிற்சி மையம் வழங்கி வருகிறது.இந்தியாவில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் இதன் கிளை கோவை ராம் நகர் பகுதியில் துவங்கப்பட்டது.
இதற்கான துவக்க விழாவில் முன்னால் காவல் துறை அதிகாரியும்,முன்னால் தமிழ்நாடு தேர்வாணைய குழுவின் தலைவர் ரத்ன சபாபதி கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார்.புதிய கிளையின் செயல்பாடு குறித்து பயிற்சி மைய இயக்குனர் கிருஷ்ணபிரசாத் கூறுகையில்,முழுவதும் ஆனாலும் வாயிலாக இந்த பயிற்சி வழங்க உள்ளதாகவும்,மூன்று மாத பயிற்சி நிறைவில் தனியார் வங்கிகளில் வேலை வாய்ப்புகளை பெறலாம் என தெரிவித்தார்.
குறிப்பாக அதிகபட்சமாக 26 வயது வரம்பு உள்ளவர்கள் மட்டுமே இங்கு பயிற்சிகளை பெற முடியும் என கூறிய அவர், ஆங்கில மொழிப் பிரிவு திறன், அடிப்படை கணினி பயன்பாடுகள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதை கற்றுத்தருவதோடு,வங்கித் துறையில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட மென்பொருட்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட,
வங்கித் துறையைப் பற்றிய அடிப்படை அறிவை வழங்கும் வகையில் இங்கு பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்…