விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற ரோட்டரி கூட்டத்தில் ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டிலான இதய பாதுகாப்பு ஊர்தி நெல்லை காவேரி மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். சமுதாய கூடத்தில் வைத்து ரோட்டரி சங்க கூட்டம் நடைபெற்றது. ரோட்டரி ஆளுநர் மீரான் கான் சலீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் ஆளுநர் குருசாமி வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் மற்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ரோட்டரி கர்மவீரர் காமராஜர் இதய பாதுகாப்பு ஊர்தி வாகனம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் ரோட்டரி ஆளுநர் மீரான் கான் சலீம், இதயம் முத்து, முன்னாள் கவர்னர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ரொட்டேரியன் பீமானந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.

ரூ.1,10,00,000- மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த இதய பாதுகாப்பு ஊர்தி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற நகரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் வசதியில் பின்தங்கிய மக்கள் இலவசமாக இதய பரிசோதனைகள் பயன்பெறுவதற்கு இந்த வாகனம் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியா கிராம், மருத்துவ ஆலோசனைகள், தொலை மருத்துவ ஆலோசனைகள், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, தடையில்லா மின்சார வசதி, இதய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒலி, ஒலி நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவில் எஸ்.எஸ். ராமச்சந்திர ராஜா, கவிஞர் ஆனந்தி ராம்கோ நிறுவன அதிகாரி மோகனரங்கன், உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச இதய பரிசோதனை செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *