சேத்துப்பட்டு
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, வந்தவாசி, சாலை உள்ள காமராஜர், சிலை அருகில்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கு, மற்றும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு வலியுறுத்தி மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் ஜமால், தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் அக்பர், செயலாளர் முபாரக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பொருளாளர் இப்ராஹிம், வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பிரச்சார பேரவை மாநில பொருளாளர். சனாவுள்ள, கலந்து கொண்டு. கள்ள சாராயத்தை முற்றிலும் தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும், மேலும் தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி,சேத்துப்பட்டு, மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், உட்பட கலந்து கொண்டனர். முடிவில் வேலூர், மண்டல செயலாளர் தமிமிம், நன்றி கூறினார்.