கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயத்தின் பாதிரியாராக இருப்பவர் பிரின்ஸ் கால்வின் இவர் கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற திருச்சபை ஞாயிறு கூட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்து மதம் பற்றியும் அவர்களுடைய வழிபாடு பற்றியும் அவதூறாக பேசியிருந்தார்
இந்த நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது மேலும் பேச்சுப் பொருளாகவும் மாறியது அதனை தொடர்ந்து திருச்சபை உறுப்பினர்கள் பலரும் பாதிரியாரிடம் இது போன்ற நடந்து கொள்ளக் கூடாது என்று எடுத்துக் கூறியும் அவர் தொடர்ந்து இதே போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் அவர் மீது கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் பந்தய சாலை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் சிஎஸ்ஐ இமானுவேல் ஆலய உறுப்பினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆலய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது குறித்து அவர்கள் கூறுகையில்
பாதிரியார் பென்ஸ் கால்வின் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார் பொய்யான பல தகவல்களை பரப்பி வருகிறார் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்து சமுதாயத்தை பற்றி இழிவாக பேசி வருகிறார். பலமுறை நாங்கள் திருச்சபை கூட்டத்தின் போது இது பற்றி எடுத்துக் கூறியும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் பெயராயர் எடுக்கவில்லை தொடர்ந்து அவர் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதன் மட்டுமல்லாது பல்வேறு மோசடிகளிலும் திருச்சபைக்கு வரும் காணிக்கைகளை முறையாக கணக்கு காட்டாமல் பல்வேறு வழிகளில் திருட்டில் ஈடுபட்டும் அதே போன்ற மலபார் கோல்டு என்ற நிறுவனம் விற்றதில் வந்த பணத்தை கையாடல் செய்ததும் மேலும் அவருக்கு உறுதுணையாக பொருளாளர் உள்பட சிலரும் குற்ற செயல்கள் ஈடுபட்டு வருகின்றனர்
எனவே உடனடியாக பாதிரியார் பிரின்ஸ் கால்வினை கைது செய்ய வேண்டும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் மீது நாங்கள் பல குற்றச்சாட்டுகளை காவல்துறையிடம் கூறியுள்ளோம் அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர் செய்த குற்ற செயல்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் அது வரை நாங்கள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறினர்
மேலும் அவர் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது அதற்கும் சென்று தான் வருகிறார் அவர் மீது திருமணம் செய்தது சம்பந்தமாக பல்வேறு பிரச்சனைகளும் எழுந்துள்ளது போலியாக திருமணம் செய்ததாகவும் ஒரு தகவல் உள்ளது இது போன்று பல குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்
மேலும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் போன்ற செயல்களையும் புரிந்துள்ளார் அதற்கு ஆதாரமும் எங்களிடம் உள்ளது எனவே பாதிரியார் பிரின்ஸ் கால்வினை உடனடியாக கைது செய்து அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறினார்