கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் திருமுட்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிக பெரிய கிராமம் இந்த பஞ்சாயத்தில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மிகவும் சேதம் அடைந்த முதன்மை சாலை சுமார் 2000 மீட்டர் வரை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது

இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நடக்கமுடியாமல் மிகவும் சிரமம் அடைக்கிறார்கள் இது குறித்து அதிகாரிகள் வசம் பலமுறை நடவடிக்கை எடுக்க சொல்லியும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளார்கள்

எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தரமான தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள்

மேலும் கனமழை பொழியும் நேரங்களில் தண்ணீர் வீட்டுக்குள் சூழ்ந்து குடிசை எல்லாம் பாழாகிறது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது அலட்சியம் செய்யும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு. நிருபர் அ. திருநாவுக்கரசு வடக்குபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *