திண்டுக்கல் அருகே உள்ள கோடங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜிடிஎன் கலைக்கல்லூரி சமூகப்பணித்துறை & லயன்ஸ் கிளப் ஆப் திண்டுக்கல் ரத்தினம் சார்பில் சுமார் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த விழாவில் சமூகப்பணித்துறை மாணவர்கள் ஒவ்வொரும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர், முருகானந்தம், உதவிப்பேராசிரியர் ராஜா செய்தனர்.
விழாவில் சமூகப்பணித்துறை தலைவர் ரெஜினா, லயன்ஸ் கிளப் ஆப் திண்டுக்கல் ரத்தினம் நிர்வாகிகள் பேராசிரியர் அரவிந்தன், பேராசிரியர் கதிரவன், பேராசிரியை பாலகோமளா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கிராம பஞ்சாயத்து தலைவர், எழுத்தர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற உதவினர்.