சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அதை கண்டித்து சிவ சேனா கட்சி மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் வன்மையாக கண்டிக்கிறேன் எனக் கூறினார்.அவர் கூறியதாவது;
தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் கையாளாகாத்தனம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது
ஒரு தேசிய கட்சி மாநில தலைவர்
நடு ரோட்டிலே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது ஒரு மாநிலத் தலைவருக்கு
இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர மக்களின் நிலை என்ன????
தமிழக காவல்துறை
மெத்தனப் போக்கில் நடப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது
சட்ட ஒழுங்கு தரமற்ற நிலையில் இருப்பது கடும் வேதனை அளிக்கிறது
தமிழகத்திலே கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு கஞ்சா போதை வஸ்துக்களால் உயிரிழப்பு
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டு பல உயிரிழப்பு
இதற்கு தமிழக அரசு என்ன பதில் அளிக்கப் போகிறது என கூறினார்