திருவாரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் வி.தவமணி தலைமையில் ஜூலை ஆறாம் தேதி சனிக்கிழமை அன்று திருவாரூர் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எதிர்வரும்
ஜூலை பத்தாம் தேதி புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள கருப்பு தின ஆர்ப்பாட்டம்.
2024- ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா
கைபேசி தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்டவை பற்றி அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர் ஏ.பிரேமா விளக்கிப் பேசினார். மாவட்ட வட்டார நிர்வாகிகள் உள்பட உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் டி.முருகையன் அவர்களிடம் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கப்பட்டது முடிவில் மாவட்ட பொருளாளர் பி.மாலதி நன்றி கூறினார்.