பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
விவசாயிகளுக்கு தேவையான, பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டி..பாபநாசம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பருவம் தவறி பெய்த மழையால் நெல், உளுந்து, பருத்தி, எள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டியும், விவசாயிகளுக்கு தேவையான பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும் எனவும், குருவை தொகுப்பு திட்ட பணிகளை உடனடியாக துவங்கி பாரபட்சமில்லாமல், அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளில் பருத்தி செடிகளை பிடித்தவாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.