தென்காசி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சற்குண சத்திய வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி தலைமை தாங்கினார்.பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் ராஐலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப் பாளர் ஆசிரியர் குத்தாலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் வெங்கடாம் பட்டி பஞ்சாயத்து தலைவர் செல்வி சாருகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் போதை இல்லா உலகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி போதை ஒரு கொடிய நோய் அது நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் என்று தனது கருத்தினை மாணவரிடையே பதிவு செய்தார்.அதனைத் தொடர்ந்து
பள்ளியின் நாட்டுநல பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் குத்தாலிங்கம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அனைத்து மாணவர்களும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் குத்தாலிங்கம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மகேஷ் ,சேர்மராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் . நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் தங்கராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்