பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா. தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்..
திருவிழாவில், 1000-க்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் திருப்பாலத்துறை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் 1000-க்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குவீதி அருகே உள்ள குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், பக்தர்கள் சக்திகரகம் எடுத்து மேளதாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
அங்கு கோயில் அருகே அமைக்கப் பட்டிருந்த தீகுண்டத்தில் இறங்கி பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தீமிதி திருவிழாவை காண, திருப்பாலைத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் மேற்பாற்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் சுமார் 3-மணி நேரம் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை திருப்பாலத்துறை கிராமவாசிகள் செய்திருந்தனர்.