சீர்காழி அருகே மதுபானம் அருந்தியவர் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (35) இவர் தனது சித்தப்பா மகன் செல்வகுமாருடன் சீர்காழி அருகே உள்ள கொண்டத்தூர் பகுதியில் தங்கி செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும் நேற்று சொந்த ஊருக்கு சென்று விட்டு கொண்டத்தூர் வரும் வழியில் கதிராமங்கலம் அரசு மதுபான கடையில் மது வாங்கி அருந்திவிட்டு திரும்பியுள்ளனர்.

அப்பொழுது கனகராஜ் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். அவரை தூக்கிய செல்வகுமார் கொண்டத்தூர் ஆற்றுப்பாலத்தில் அமர வைத்துவிட்டு தன்னுடன் வேளை செய்பவர்களை அழைத்து வந்து கனகராஜை பார்த்துள்ளார் அப்பொழுது கனகராஜ் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார்.

இதனை அடுத்து அவர்கள் 108 வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த 108 வாகன உதவியாளர் மற்றும் செவிலியர் அவரை பரிசோதனை செய்து அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரின் அங்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கனகராஜின் தந்தை குணசேகரன் வைத்தீஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அரசு மதுபான கடையில் மதுபானம் அருந்தியதால் உயிர் இழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் உயிரிழந்த கனகராஜ் மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் சாராயம் வாங்கி அருந்ததிதாகவும், அதனை தொடர்ந்து போதை பத்தவில்லை என்று கதிராமங்கலம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி அருந்திய பிறகு மயக்கமுற்று கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *