தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு சுதந்திர போராட்ட வீரர் திரு அழகு முத்துக்கோன் அவர்களின் 267 வது குருபூஜை விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
பின்பு அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவரது வரலாற்றை பொதுமக்களுக்கு மகாசபை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்வினை திருப்பூர் திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் க செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானத்தை துவக்கி வைத்தார்
திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜன் .பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன். மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி. வார்டு செயலாளர் முகமது ரபீக் ..தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் திருப்பூர் மாவட்டம் கௌரவ தலைவர் சீனிவாசன். ஒருங்கிணைப்பாளர் கேசவன் .வரவேற்பு குழு பாண்டீஸ்வரன். ரத்தினகுமார்.
மற்றும் இந்த விழா ஏற்பாடு மாவட்ட தலைவர் சக்திவேல். மாவட்ட செயலாளர் நாதன். மாவட்ட பொருளாளர் ரமேஷ். ஆகியோர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.