பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து இழிவாக பேசிய அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அண்ணாமலை காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழிவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது தொடர்ந்து அண்ணாமலை இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடரும் என காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,
இதில் ஜ.என்.டி.சி. கோவை தெற்க்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கிணைத்து கடவு சட்ட மன்ற பொருப்பாளர் சேதுபதி, நகர தலைவர் சார்லஸ், செந்தில், பத்திரகிரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.