கோவையில் கடந்த 25 வருடங்களாக பாஸ்போர்ட்,,புதிய தொழில் துவங்குவதற்கு தேவையான அரசு அனுமதி ஆவணங்கள் பெறுவது,புதிய வீடு,தோழிற்சாலை கட்டுவதற்கான தேவையான அனுமதி பெறுவது என பல்வேறு அரசு தொடர்பான சான்றிதழ் மற்றும் ஆவணங்களை முறையாக பொதுமக்களுக்கு பெற்று தரும் சேவையை கணேசன் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது இந்த சேவையை விரிவு படுத்தும் விதமாக கோவை ராம் நகர் சாவித்திரி போட்டோ ஹவுஸ் அருகில் ஆண்டிடோட் எனும் புதிய வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளது.
இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக,துணை ஆட்சியர் நிறைமதி, ஸ்ரீதேவி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கணேஷ்,ஆகியோர் கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தனர்.
இது குறித்து ஆண்டிடோட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கணேசன் கூறுகையில்,தற்போது வேகமான உலகில்,அவரவர்களின் பணிகளில் அனைவரும் பிசியாக இருப்பதால்,அரசு தொடர்பான வேலைகளை செய்ய இயலாமல்,அல்லது முறையான வழிகாட்டுதல் இல்லாமல் உள்ளனர்.
எனவே இது போன்றவர்களுக்கு வழிகாட்டும் விதமாக சேவை செய்யும் நோக்கத்தில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த புதிய மையத்தில் பாஸ்போர்ட் பெறுவது, அரசு தொடர்பான அனைத்து விதமான சான்றிதழ்கள்,புதிய வீடு,தோழிற்சாலை கட்டுவதற்கான தேவையான அனுமதி பெறுவது,விசா,எம்பஸி தொடர்பான வெளிநாடுகளுக்கான உள்நாட்டு சேவைகள்,என அனைத்து விதமான அரசு தொடர்பான அனுமதி சான்றிதழ்கள்,ஆவணங்களை எளிதாக,விரைவாக அதே நேரத்தில் முறையாக பெற்று தருவதாக அவர் தெரிவித்தார்..