தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஜூலை.12. தஞ்சாவூரில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு.முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: வரும் 2026 தேர்தலில் பாஜக தனித்து நிற்க தயார், காங்கிரஸ் கட்சி தனித்து நிற்க தயாரா என பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைக்கு சவால் விடுத்தார்.
இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அநாகரிகமாகவும் அவதூறாகவும் பேசுகிறார்.
திமுகவின் முதுகில் ஏறி காங்கிரஸ் கட்சி சவாரி செய்கிறது. அண்ணாமலை என்பவர் தனிப்பட்ட நபர் அல்ல விமர்சனம் செய்வதற்கு, காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினால் எங்களுடைய போராட்டமும் அனைத்து இடங்களிலும் கொடும்பாவி எரிப்பு, ஆர்பாட்டம், சாலை மறியல் என போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். மேலும் மீனவர்கள் பிரச்சனை ஏற்பட காரணம் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகச்சத்தீவை தாரை வார்த்தது தான். பாஜக மோடி ஆட்சி வந்த பிறகு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கைது செய்வதை நிறுத்துவதற்கான முயற்சிகள் எடுப்போம். திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலத்தில் உட்கட்சி பிரச்சனையால் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் வந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட தலைவர் ஜெய்சதிஷ், காமராஜ், மேலவெளி முரளிதரன், பொன்.மாரியப்பன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.