திமுக கழக நிர்வாகிகள் குழந்தைகள் 29 மாணவ மாணவிகளுக்கு 22 லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகை
நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் இராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல் சேந்தமங்கலம் ராசிபுரம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர்களில் உள்ள கழக நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் பேராசிரியர் அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட திமுக அவை தலைவர் சி மணிமாறன் தலைமை தாங்கினார் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே ஆர் என் இராஜேஸ்குமார் கலந்துகொண்டு 29 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 22 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்