தமிழக அரசின் மருத்துவத்துறை , காவல்துறை உள்ளிட்ட 15 துறைகளில் பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்று அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது மக்களுடன் முதல்வர் திட்டம்
இந்த திட்டத்தை கிராம ஊரக பகுதியிலும் விரிவடைய செய்யும் நோக்கத்தில் சமீபத்தில் தர்மபுரியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம் ஊராட்சியில் நெமிலி, வளர்புரம், மண்ணூர், செங்காடு, மேவளூர்குப்பம் உள்ளிட்ட 6 ஊராட்சி மக்களுக்காக மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 1000க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.
இந்த திட்ட துவக்க விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகுமார், எபிநேசர், திமுக ஒன்றிய செயலாளர் கோபால் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்