பழனி அருகே தேவேந்திர குல வேளாளர் பொது சபை சார்பாக உண்ணாவிரத போராட்டம்..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி சந்தப்பேட்டை திடலில் தேவேந்திரகுல வேளாளர் பொது சபை சார்பாக பழைய ஆயக்குடியில் உள்ள அரசு மருத்துவமனை கட்டிடம் பாலடைந்து பயன்படுத்த முடியாமல் காணப்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனையை சார்ந்து பழைய ஆயக்குடி, புது ஆயக்குடி, ஓபுளாபுரம்,
டிகேஎன்புதூர், பச்சளநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி,அமரபூண்டி, எரமநாயக்கன்பட்டி, ரூக்குவார்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் இருந்து பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் போதுமான வசதியின்றி மருத்துவமனை காணப்பட்டு வருவதால் உடனடியாக சேதமடைடைந்த மருத்துவமனையை இடித்துவிட்டு புதிய மருத்துவமனை கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தியும்
சந்தப்பேட்டையில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து விழுந்ததால் தற்போது வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது உடனடியாக மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும்
தொடர்ந்து பழைய ஆயக்குடி பகுதியில் பொது நூலகம் கட்டிடம் சொந்த கட்டிடமாக அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்வின் தலைமையாக வருமானவரித்துறை ஆணையர் ஓய்வு கிருஷ்ணசாமி, முன்னிலையாக தேவேந்திரகுல வேளாளர் பொது சபை செயலாளர் வெங்கடாசலம் துணை தலைவர் முத்துசாமி
துணை செயலாளர் சக்திவேல் மற்றும் சிறப்புரையாக சமூக ஆர்வலர் லோகநாதன்,
தேமுதிக களஞ்சியம், பேரூராட்சி முன்னாள் தலைவர் சுந்தரம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூக அறக்கட்டளை தலைவர் முருகானந்தம், பொருளாளர் ஆறுமுகம்,செல்வாஜீ, உள்ளிட்டோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றன.
தொடர்ந்து ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு கோரிக்கையை எடுத்துரைக்கும் விதமாக தேவேந்திர குல வேளாளர் பொது சபை மற்றும் இளைஞர் அணி சார்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றன..