மாதவரம் ஆந்திரா பஸ் நிலையம் அருகே ஜி.என்.டி சாலையில் இடையே செல்லும் உயர்மின்னழுத்த மின்சார கேபிள் நேற்று காலை திடீரென அறுந்து விழுந்தது. முன்னதாக தீப்பொறிகள் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக அவ்வழியே சென்ற வாகனங்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டன. உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடம் விரைந்த மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த கேபிளை பத்திரமாக அகற்றினர்.