ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடையடைப்பு அனைத்து கட்சியினர் , வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் குழு ஆதரவு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தற்போது செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 5ம் தேதி நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் அருகே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று 7 ஏக்கர் நிலம் நகராட்சிக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் அனைத்து வியாபாரி சங்கம், பல்வேறு கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்காமல் ஆளும் கட்சியினர் தனிநபரின் நோக்கத்திற்காக பேருந்து நிலையம் அமைப்பதாக கூறி அனைத்து வியாபாரி சங்கத்தினர் பல்வேறு கட்சி தரப்பினர் பொதுமக்கள் என பல எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து இன்று ராசிபுரம் நகர் பகுதியில் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ராசிபுரம் நகர்ப்பகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அமைச்சர், எம் பி, போன்றோர் சுய லாபத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் , அனைத்து கட்சிகள், தெரிவித்தனர்.