பெரம்பலூர் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட கோழி,பன்றி ,ஆடு வெட்டி முப்பெரும் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை தண்ணீர் பந்தலில் ஸ்ரீ கரடி முனீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இங்கு உள்ள கரடி முனீஸ்வரன் ஆலயத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை செல்பவர்கள் கோவிலில் தரிசனம் செய்வது வழக்கம்.
மேலும் கரடி முனீஸ்வரர் ஆலயத்தில் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் உயிர் பலியீட்டு பூஜை செய்வது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் வருடம் தோறும் ஆடி 1ம் தேதி கரடி முனீஸ்வரன் ஆலயத்தில் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பொதுமக்கள் ஆடு,கோழி,பன்றி என உயிர்களை பலியிட்டு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
நேற்று ஆடி 1ம் தேதியை முன்னிட்டு கரடி முனீஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழி,பன்றி,ஆடுகளை பலியிட்டு பொங்கல் மாவிளக்கு வைத்து பொது மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வெகு விமர்சையாக நடைபெற்ற கரடி முனீஸ்வரன் ஆடி திருவிழாவில் 1000ககும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் உயிர் பலியிட்ட ஆடு,கோழி, பன்றிகளில் இருந்து மாமிசங்களை பெற்று அதை சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கரடி முனீஸ்வரன் கோவில் பூசாரி முத்து என்கிற அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார்.