தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி பள்ளியில் குழந்தைகள் பாரம்பரிய உடைகள் அணிந்தும்,தமிழர்களின் கலாச்சாரத்தை முன் நிறுத்தியும் உற்சாகமாக கொண்டாடி அசத்தினர்..

தமிழர்களின் தாய்நிலமான தமிழ்நாடு,சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது.சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழர்கள் தாய்மண்ணுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் இன்று ஜூலை 18 ஆகும். இந்த நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் குழந்தைகள்,மாணவ மாணவிகள் தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றும் விதமாக பாரம்பரிய வேஷ்டி,சேலைகள் அணிந்து கொண்டாடினர்.

பள்ளியின் தாளாளர் அருட்தந்தை மாரிடின் அருட் தந்தை அனில் ராஜ்,பள்ளியின் முதல்வர் டாக்டர். தனலட்சுமி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், இந்திய போராட்ட தியாகிகள்,தமிழுக்கு முக்கியம் தந்த பாரதியார், திருவள்ளுவர் , ஒளவ்வையார் ஆகியோரின் வேடமணிந்து அவர்களின் வாழ்வியல் முறையை மழலையர் குரலில் வெளிப்படுத்தி கொண்டாடினர்.

அதே போல் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகள், ஏர் கலப்பை விவசாயம், விவசாய விளை பொருட்கள்,உணவு பொருட்கள், சமையல் பொருட்கள் , உள்ளிட்டவையினை ஆகியவை தத்ரூபமாக காட்சிப்படுத்தி அசத்தினர்.இதனை பெற்றோர்கள், ஆசியர்கள்,வியப்புடன் பார்த்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *