மதுரை எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாள் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை சித்ரா வரவேற்றார்.

தமிழ்நாடு பெயர் சூட்டிய விதம், வரலாறு, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம், தமிழ் மொழியின் சிறப்பு ஆகியன குறித்து ஆசிரியை அருவகம் பேசினார்.

தியாகி சங்கரலிங்கனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் நாடு குறித்த அண்ணாவின் உரை ஒளிபரப்பப்பட்டது.

உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் தமிழா நீ பேசுவது தமிழா பாடல் ஒளிபரப்பப்பட்டது. தூய தமிழ் மொழியில் பேச, எழுத மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழ் நாடு நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். விழாவில் மாணவ மாணவியர் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *