தென்காசி மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்செங்கோட்டை வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் ஊரில் என்ற திட்டத்தை அறிவித்து அதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இனி ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் செங்கோட்டை கட்டத்தில் நேற்று பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்து பல்வேறுதுறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்