நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
பாங்கல் சூரமங்கலம் ஸ்ரீ தைலாங்கண்ணி பத்ரகாளியம்மன் ஆலய 7 ஆம் ஆண்டு தீச்சட்டி ஏந்தும் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது…
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள பாங்கல் சூரமங்கலம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ தைலாங்கண்ணி பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் 7ஆம் ஆண்டு தீச்சட்டி ஏந்தும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து கையில் தீச்சட்டியை ஏந்தி ஆலயத்தை சுற்றி வலம் வந்து வேண்டுதலையை நிறைவேற்றினர்.முன்னதாக பால்குடம் கரகம் எடுத்தலும் கஞ்சி வார்த்தலும் பூ அலங்காரம் அபிஷேக ஆராதனையும் நடைப்பெற்றது.
பின்பு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சூரமங்கலம் மற்றும் பாங்கல் கிராமத்தினர் செய்திருந்தனர்.
இத்திருவிழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.