செங்குன்றம் செய்தியாளர்
புழல் அடுத்த புத்தகரம் பகுதியில் ஜெயக்குமார் (வயது 47 ) என்பவர் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வரும் கடை நடத்தி வருகிறார்.
இங்கு நேற்று முன்தினம் அவரிடம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராம்கி என்ற ராம்குமார்( வயது 32 ) ரூபன் 35 டேவிட் என்ற டேவிட் பிரசாந்த்( வயது 20 )புழலைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (வயது 29) விக்கி என்ற விக்னேஸ்வரன்( வயது 24) ஆகியோர் அவரது கடைக்கு சென்று மாமுல் தரும்படி கேட்டு அவரிடம் இருந்த 5000 ரூபாய் பணத்தையும் பறித்து கொண்டு சென்றனர்.
இது குறித்து புழல் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் கொடுத்த புகாரில் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து ஆராய்ந்து புழல் காவாங்கரை திருநீலகண்ட நகரில் பதுங்கி இருந்த ஐந்து பேரையும் பிடித்து கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2000 ரூபாய் பணத்தையும் இரண்டு கத்தியும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.