தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் கம்பம் எம்எல்ஏ ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவின் தரம் உணவின் வகைகள் எவ்வளவு எத்தனை பொதுமக்கள் இங்கு வந்து சாப்பிட்டு பயன்பெறுகிறார்கள் என்பது குறித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் நா ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார்

இந்த ஆய்வின் போது கம்பம் வடக்கு நகர செயலாளர் எம் சி வீரபாண்டியன் தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா தலைமை செயற்குழு உறுப்பினரும் கம்பம் நகரமன்ற உறுப்பினர் குருகுமரன் உள்பட நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் பி சூரியகலா கூறும் போது அம்மா உணவகம் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மெகா திட்டமாகும் இந்த திட்டம் ஏழை எளிய பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற திட்டம் இந்த திட்டம் திமுக ஆட்சி வந்தால் முடக்கி வைக்கப்படும் என்று பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து தரமான உணவு ஏழை எளிய மக்களுக்கு மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் நடவடிக்கை எடுத்துள்ளார்

இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என திமுக எம்பி எம்எல்ஏ உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அண்ணா திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்று பாராமல் இந்தத் திட்டம் மக்களிடம் வரவேற்பு பெற்றதை அறிந்து அம்மா உணவகங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட உத்தரவிட்டுள்ளார்

இதன் படி கம்பம் எம் எல் ஏ நா. ராமகிருஷ்ணன் அம்மா உணவகத்தை ஆய்வு செய்து தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் இந்த நடவடிக்கையை எடுத்த தமிழக முதல்வரை ஏழை எளிய பொதுமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *