கடலூரில் இந்து முன்னணியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் இவற்றின் மையமாக விளங்கும் கோயில்களை நாத்திக ஹிந்து விரோத திராவிடமாடல் அரசு தொடர்ந்து சீரழித்து வருகிறது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லாயிரம் கோயில்கள் இடிந்த நிலையில் சிதைவடைந்து சீரழிந்து கிடைக்கிறது.
பல்லாயிரம் கோயில்களில் விளக்கு இல்லை, வழிபாடு இல்லை,ஒரு கால பூஜை கூட நடைபெறு
வதில்லை.
தரிசன கட்டணம், அர்ச்சனை கட்டணம், நேர்த்திக்கடன் கட்டணம், விளக்கு பூஜை கட்டணம், மொட்டை அடிக்க கட்டணம்,
காது குத்த கட்டணம் என பல பெயர்களில் கோயில்களில் கட்டண கொள்ளை அடிக்கப்படுகிறது.
இந்து கோயில் திருவிழாவிற்கு கூடுதல் கட்டணத்துடன் அரசு பேருந்துகள், ஆனால் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல ஒரு நபருக்கு 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 25,000 ஆக மான்யத்தை உயர்த்தி தமிழக அரசு வழங்கி உள்ளது.
உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து சக்திவேல் தலைமையில் தண்டபாணி, வேல்முருகன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் சுமார் 60 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.