தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் எஸ் எஸ் கிராண்ட் மஹாலில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்குமாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மாநில பொருளாளர் சையத் இப்ராஹிம் மேலாண்மை குழு தலைவர் சம்சுல்ஹா ரஹ்மானி தணிக்கை குழு தலைவர் எம் எஸ் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் தமிழகம் ஆந்திரா கர்நாடகா மும்பை ஆகிய மாநிலங்களை சார்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில்கீழ்க்கண்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அஸ்ஸாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் மற்றும் யோகி ஆதித்தனார் பேச்சிற்குதடை விதிக்க வேண்டும் என்றும் நீட் தேர்வின் உள்ள குளறுபடிகளை உடனடியாக களைய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 3-5 இட ஒதுக்கீடு எல்லாத் துறைகளிலும் வழங்க வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை மத்திய மாநில அரசு கட்டுப்படுத்த கோரியும் இந்த செயற்குழுவின் தீர்மானத்தோடு நிறைவு பெற்றது இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாநிலச் செயலாளர் அப்துல் முஹ்சின் நன்றி உரையாற்றினார்