தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் எதிரில் அதிமுக சார்பில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து, மாநகர கழக செயலாளர் சரவணன் ஏற்பாட்டின் பேரில், மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் மக்கள் விரோத திமுக அரசின் செயல்களை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை திருஞானம், விவசாய பிரிவு செயலாளர் ராஜமாணிக்கம், கீழவாசல் பகுதி செயலாளர் சதீஷ் குமார், மருத்துவ கல்லூரி பகுதி செயலாளர் மனோகர், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.