தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கட்டளை குடியிருப்பு சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சித் துறை.மாவட்ட வேளாண்மை துறை
தோட்டக்கலை துறை ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சமூக நலத்துறை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவம்மற்றும் சுகாதாரத்துறை கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை. குறு சிறு மற்றும் நடுத்தர
தொழில்கள் துறை,காவல்துறை,குழந்தைகள் பாதுகாப்பு துறை 1098 சகி உள்பட
பல்வேறு துறை சார்ந்த அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள்ஒரு வட்ட ஆய்வாளர்கள்
கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள்,ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.