கோவை ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் கோவை மாநகராட்சி அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குழு போட்டிகளை மாநகராட்சி ஆணையாளர் ம.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் துணை மேயர் ர.வெற்றிச்செல்வன் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன் ஆகியோர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், நகரமைப்பு மற்றும் அபிவிருத்திக்குழு தலைவர் சோமு என்கிற சந்தோஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக்செல்வராஜ்MC , மாமன்ற உறுப்பினர் அழகு ஜெயபாலன், மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.