திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் ஜூலை 28 அன்று பிரபல நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா முன்னிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 5000 நடன கலைஞர்கள் பங்கு பெற்ற மாபெரும் நடன சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
100 நிமிடங்கள் இடைவிடாமல் நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடன கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். இந்த நடன நிகழ்ச்சியில் ஓசூரில் பிரபலமான தேர்ட் ஐ டான்ஸ் கம்பெனியின் மாணவ, மாணவிகள் டான்ஸ் மாஸ்டர் ஈரோடு கௌரிஷ் தலைமையில் கலந்து கொண்டு நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
இந்த மாபெரும் நடன நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், திரைப்பட நடிகர் ரோபோ சங்கர், ஓசூர் போட்டோ வீடியோ சங்க பொருளாளரும் ஜெய் ஓவியா டிஜிட்டல் ஸ்டுடியோவின் உரிமையாளருமான M.உமாசங்கர் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.