பென்னாகரம் ஒன்றியம் செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தலைமையாசிரியர்
மா. பழனி தலைமையில் நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழு புதியகட்டமைப்பு உருவாக்குவது சார்ந்து அரசின் வழிகாட்டுதல் படி 24 உறுப்பினர்கள் கொண்ட குழு உருவாக்க அரசு வழிகாட்டி உள்ளது.
அதில் தலைவர்,துணைத்தலைவர்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,பெற்றோர்கள்,முன்னாள் மாணவர்கள் உள்ளடங்குவார்கள். இந்த மாதம் ஆகஸ்ட் கடைசி தேதியில் நம் பள்ளிக்கான பள்ளி மேலாண்மை குழு தேர்தல் நடைபெறுவது பற்றி தலைமை ஆசிரியர் விளக்கினார்.
வட்டார கல்வி அலுவலர் இரா. மணிகிருஷ்ணன்
மேலாண்மை குழுவின் நோக்கம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏற்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்படுவதற்கும்
பள்ளியின் வளர்ச்சி சார்ந்து முடிவெடுப்பதற்கு இக்குழு அவசியம் நம் பள்ளி நம் பெருமை என்பதை நிலநாட்டும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
நரசிம்மன், பவுனேசன், அஜய், பூபதி, முனுசாமி, கங்கா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.