செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு அறிமுகக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பேரூராட்சி தலைவர் ராதா ஜெகவீரபாண்டியன் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் பயிற்றுநர் பிரபு மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் என். அனந்தராஜன் வரவேற்றார்.
மேலும் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பற்றிய பல்வேறு கருத்துரைகள் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.