தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருவாரூர் மண்டல பருவ கால ஊழியர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதிய பலன் வழங்க அண்ணா தொழிற்சங்க சார்பில் கோரிக்கை மனு.

திருவாரூர் ஆகஸ்ட் 3. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருவாரூர் மண்டல அண்ணா தொழிற்சங்க சார்பில் பருவ கால ஊழியர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதிய பலன் வழங்க கோரிக்கை மனு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்களிடம் வழங்கினர்

அந்த கோரிக்கையை தெரிவித்ததாவது திருவாரூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில் 12(3) ஒப்பந்தத்தின்படி நியமனம் செய்ய வேண்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிவு ஓய்வு பெற்ற பணியாளர்கள் மிகவும் சொற்பமான அளவில் பென்ஷன் பெற்று வருகிறார்கள்

கருணை அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நான்காயிரம் வழங்குவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது எனவே அதன் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு பென்ஷன் தொகையினை உயர்த்தி வழங்குவதற்கு தக்க ஆவணை செய்ய வேண்டும் திருவாரூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் குருவை மற்றும் சம்பா பருவத்தில் ஒன்பது லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படுகிறது

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனடியாக இயக்கம் செய்ய முடியாமல் மூட்டைகள் தேங்கி அதற்கான இயக்க இழப்பை கொள்முதல் பணியாளர்கள் மீது சுமத்தப்படுகிறது

எனவே நெல் தேக்கம் இல்லாமல் உடனுக்குடன் இயக்கம் செய்வதற்கு திருவாரூர் மண்டலத்தில் சேமிப்பு செய்வதற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே சேமிக்க வசதி உள்ளது

அதனை இயக்கம் செய்வதற்கு ஏதுவாக திறந்தவெளி சேமிப்பு மையம் மற்றும் கிடங்கு வசதி மற்றும் அயல் மண்டலங்களுக்கு ரயில் மூலம் இயக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருவாரூர் மண்டல அண்ணா தொழில் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்தனர் நிகழ்வின்போது நுகர் பொருள் வாணிப கழக திருவாரூர் மண்டல அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பி பாலசுப்பிரமணியன் ஏ சுரேஷ் மண்டல பொருளாளர் எஸ் மணிகண்ட மூர்த்தி இணை செயலாளர்கள் ஏ ஜி சுப்பிரமணியன் வி அசோகன் எம் வெற்றிவேல் துணைத் தலைவர்கள் எஸ் ராஜசேகர் எஸ் அன்பு சங்கர் ஆர் சந்திரசேகரன் துணைச் செயலாளர்கள் எம் பெரியசாமி என் ஜெக ஜீவன் ராம் யூ கோமகன் கே சக்திவேல் அலுவலக செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *