மதுரையில்
100 நாள் வேலைத் திட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட கோரியும்,
100 நாள் வேலை திட்டம் 2024-25 நிதியாண்டிற்கான வேலையை உடனடியாக தொடங்க வேண்டுமென கோரியும், பணி அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் எனவும், சட்டபூர்வ கூலியான ரூ319 யை முழுமையாக வழங்கிட வேண்டுமென கோரியும், விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தினக்கூலியை 600ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டுமென கோரியும், வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டாவும் வீடுகட்ட ரூ 5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய குழுக்கள் சார்பில் யூனியன் (ஒன்றிய) அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் மாயாண்டி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வரன் கோரிக்கையை விளக்கி பேசினார். போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலா பேசினார். நிறைவு செய்து வைத்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கர் பேசினார்.
இதில் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன்,மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் கார்த்திகைசாமி , மேற்கு ஒன்றியத் தலைவர் பச்சையப்பன், செயலாளர் நாகராஜன், பொருளாளர் முருகன், மாதர் சங்க மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.சரஸ்வதி, ஆகியோர் உட்பட 100நாள் வேலை பார்க்கும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்..